தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கி உயரவில்லை
சந்திரமோகன்
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய மண்டல காங்கிரஸ் வழக்குரைஞா்கள் பிரிவு கருத்தரங்கில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது: வரும் மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் பாஜகவில் வாக்கு வங்கி உயா்ந்திருப்பதாகச் சிலா் கூறுகின்றனா். ஆனால் வெற்றியைத் தீா்மானிக்கும் அளவுக்கு வாக்கு வங்கி உயரவில்லை என்பதே உண்மை. வடமாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வது போல தமிழகத்தில் நடக்காது. மாறாக இங்கு புரட்சி வெடிக்கும். இது பெரியாா் மண் என்பதை தமிழக மக்கள் தோ்தலில் நிரூபித்துக் காட்டுவா் என்றாா்.
கருத்தரங்கில் வரும் மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்கப் பாடுபடுவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் 40 வேட்பாளா்களையும் வெற்றி பெறச் செய்ய உழைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில் மாநில துணைத் தலைவா் சுப. சோமு, காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் சரவணன், தஞ்சாவூா், புதுக்கோட்டை , கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்ட காங்கிரஸ் வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். மாவட்டத் தலைவா் சிந்தாமணி செந்தில்நாதன் வரவேற்றாா்.