கரூர் அருகே தென்னை மரத்தில் கருந்தலை புழு- விவசாயிகள் பாதிப்பு.

கரூர் அருகே தென்னை மரத்தில் கருந்தலை புழு பதிப்பப்பால் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், புகழூரில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் கழிவு வெளியேறும் பகுதியில் கந்தசாமிபாளையம், சொட்டையூர், சொக்கன்காடு, எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவு நீரினால் இந்த விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. வேறு வழியின்றி விவசாயிகள் தென்னை விவசாயம் மேற்கொண்டனர்.இதனால், ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் வளர்க்க தொடங்கினர்.

இந்த நிலையில் கடந்த 1 மாத காலமாக தென்னை மரத்தில் கருந்தலை புழு பாதிப்பு ஏற்பட்டு அது தென்னை மரத்தின் மட்டையில் உள்ள பச்சையத்தை உண்டு மட்டையை இரு பக்கமும் மூடிக் கொண்டு இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்து விட்டது. அந்த ஒரு புழு ஒரு முறை முட்டையிட்டால் சுமார் 150 புழுக்கள் உருவாகிறது.

இதனால அசுர வேகத்தில் கடந்த சில நாட்களில் 600-ஏக்கர் வரை பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து காகித ஆலை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர் அப்பகுதி விவசாயிகள். இதனால் காகித ஆலை நிர்வாகம் ஒரு ஏக்கருக்கு 2 விளக்கு பொறி என 60 ஏக்கருக்கு 120 விளக்குப் பொறிகளை வாங்கி விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர். ஆனால், அவை பெரிய அளவில் கட்டுப்படுத்தவில்லை.

இந்நிலையில் கருந்தலை புழு தாக்குதல் வேகமாக பரவி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பாதிப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளது. இதனால், கரூரில் தென்னை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஆலை நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூலிமங்களம் கிராமத்தில் இது போன்ற பாதிப்பு ஏற்பட்ட போது பூச்சி மருந்து அடித்து தென்னையை காப்பாற்றி தந்தது போல, தற்போதும் தென்னை பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு பூச்சி மருந்துகளை அடித்து தென்னையை காப்பாற்றி தர வேண்டும் என தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story