திருச்செங்கோட்டில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

X
திருச்செங்கோட்டில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
டெல்லியில் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் போராடி வருகின்றனர். விவசாய சங்கத்தினருக்கு எதிராக கண்ணீர் புகை குண்டு வீசியும் ரப்பர் குண்டால் ஆன துப்பாக்கிச் சூடு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளை ஒன்றிய அரசு ஏவி வருகிறது. இதனை கண்டித்து இன்று நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அண்ணா சிலை அருகே கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார். விவசாயிகளை தாக்கும் மோடி அரசை கண்டித்தும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் விவசாய சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர் இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொறுப்பாளர் பெருமாள் கூறும் போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாய சட்டங்களுக்கு எதிராக ஓராண்டு போராடி அந்த சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப்பெற்றது அதில் விவசாயிகளுக்கு செய்து தருவதாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டது. அதனை கேட்டும் விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வலியுறுத்தியும் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர் புகை குண்டு ரப்பர் குண்டு சூடு அடக்குமுறைகளை ஒன்றிய அரசு ஏவி வருகிறது. விவசாயிகள் மீது பொய் வழக்குகள் போட்டு அடக்கி வருகிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். விவசாயிகளுக்கு ஆதரவான நிலையை ஒன்றிய அரசு எடுத்து தக்க தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி, சிஐடியு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து குண்டு முழக்கங்களை எழுப்பினார்கள்
Tags
Next Story
