வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வீடுகளில் கருப்பு கொடி
கறுப்புக்கொடி போராட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூரில் வாடகை வீட்டில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும். தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் வீடுகளில் கருப்பு கொடிகட்டி உள்ளிருப்பு போராட்டம் 3 வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொறுப்பாளர்களையும் பொதுமக்களுக்களையும் தமிழ் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் சு. அகத்தியன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து .இப்போராட்டம் குறித்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு வீடு இல்லாத ஏழை அருந்ததியர் மக்களுக்கு இலவசவீட்டு மனைவழங்கவேண்டும்என தமிழ் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பொதுச் செயலாளர் இரா.செந்தில், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் அம்சவேணி கனகராஜ், மாவட்ட தலைவர் மு.பிராகஷ், மாவட்ட தலைவர் நீலமலை நந்தன், மகளிர் அணி நிர்வாகிகள் சந்தியா,சிவகாமி, தங்கமணி,சுமித்ரா, கௌசல்யா,ரேவதி, சசிகலா,மோகனா, லட்சுமி, சிவகாமி, ஈஸ்வரி,லதா, அலமேலு, லோகம்மாள், கலைவாணி,சூர்யா சிவகாமி,சுமதி, ரதி, தமிழரசி, சித்ரா, சரோஜா, கவிதா, முருகன்,விஜயா, சுகந்தி,பிரியா,காசி உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.