33 ஆண்டுகளாக சிட்டா வழங்காததை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

33 ஆண்டுகளாக சிட்டா வழங்காததை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

விவசாய நிலங்களுக்கு கணினி சிட்டா 33 ஆண்டுகளாக வழங்கப்படாததைக் கண்டித்து, சேந்தமங்கலம் கிராம மக்கள் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய நிலங்களுக்கு கணினி சிட்டா 33 ஆண்டுகளாக வழங்கப்படாததைக் கண்டித்து, சேந்தமங்கலம் கிராம மக்கள் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய நிலங்களுக்கு கணினி சிட்டா 33 ஆண்டுகளாக வழங்கப்படாததைக் கண்டித்து, சேந்தமங்கலம் கிராமதைச் சேர்ந்த மக்கள் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அருகே பெருமாநாடு கோதண்டராமபுரம் ஊராட்சியைச் சேர்ந்த சேந்தமங்கலம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.

இவர்களுக்கு 1991-ஆம் ஆண்டு சுமார் 400 ஏக்கர் நிலம் விவசாயப் பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 33 ஆண்டுகளாகியும் விவசாய நிலத்துக்கான கணினிப் பட்டா வழங்கப்படவில்லை. இதனால் கூட்டுறவு விவசாய சங்கத்திலோ மற்றும் மத்திய, மாநில அரசு உதவிகளோ பெற முடியவில்லை என அம்மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பல முறை அரசுக்கு கோரிக்கைஎழுப்பியும் பயனில்லாததால் அப்பகுதியில் கூடிய மக்கள் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story