பெரம்பலூரில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் கோட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி கோட்டத் துணைத் தலைவர்கள் கருணாநிதி, மதியழகன், ராஜா, காட்டு ராஜா., கோட்டச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வைத்த நிகழ்ச்சியில் , சி ஐ டி யு மாவட்ட இணை செயலாளர் கருணாநிதி சிறப்புரையாற்றினார், இதில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதன் மூலம் 3500 க்கும் மேற்பட்ட சாலை பணியாளர் மற்றும் சாலை ஆய்வாளர் பணியிடம் ஒழிக்கப்படும் அபாயம் ஏற்படும், மேலும் சுங்கச்சாவடி அமைத்து சுங்கவரி தனியார் வசூலிக்க அனுமதிக்க கூடாது.

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும், கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் வேலை வழங்கி வாழ வைத்திட வேண்டும், நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பில் மீண்டும் சீரமைப்பு செய்து, நிரந்தர பணியிடங்களை மாற்றக்கூடாது ஓய்வு பெற்ற ஊழியர்களை கொண்டு பணி மேற்கொள்ளக் கூடாது, இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கக்கூடாது.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன்,கோட்ட பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story