அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

கருப்புக்கொடி போராட்டம்

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு
சேலம் அருகே கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளது. இங்கு 3-வது வார்டுக்கு உட்பட்ட சத்யாநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்யவும், பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடிகளை கட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். தேர்தலில் ஓட்டு கேட்டு அரசியல் கட்சியினர் யாரும் உள்ளே வரக்கூடாது, சத்யா நகரில் தேர்தலை புறக்கணிப்பு செய்வதாகவும் பிளக்ஸ் பேனரையும் வைத்துள்ளனர். இதுகுறித்து 3-வது வார்டு சத்யா நகரில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எங்கள் பகுதிக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் செய்து கொடுக்கவில்லை. இதுதொடர்பாக பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. எனவே, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர். இந்த சம்பவத்தால் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story