திருமருகல் அருகே கருப்பு கொடியேந்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

திருமருகல் அருகே கருப்பு கொடியேந்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கருப்பு கொடியேந்தி போராட்டம்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடியேந்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடியேந்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி கோட்டப்பாடி,குருநாதபுரம் பகுதிகளை சேர்ந்த 2 கிராம மக்கள் அப்பகுதியில் 15 ஆண்டுகளாக சேதமடைந்து உள்ள சாலைகள்,மின்கம்பங்கள் சேதமடைந்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்,

சேதமடைந்த மேல் நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவற்றை சரிசெய்து தர வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் சரி செய்யப்படாமல் இருப்பதால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று தங்கள் வீடுகளில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகள் மற்றும் கருப்பு கொடி ஏற்றி வைத்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்த தகவல் அறிந்த நாகப்பட்டினம் தாசில்தார் ராஜா,துணை தாசில்தார் ஜெயசெல்வம்,திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால்,ஜவகர்,கிராம நிர்வாக அலுவலர் செல்வம் ஊராட்சி செயலர் சரவணன்,திருக்கண்ணபுரம் போலீசார் அப்பகுதி கிராம மக்களிடம் 4 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தையின் போது அடுத்த நிதியாண்டில் கோரிக்கைகள் முழுவதும் நிறைவேற்றப்படும் எனவும்,இந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்காமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனவும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் கலந்து சென்றனர். மேலும் வீடுகளில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த கருப்பு கொடிகளையும்,தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளையும் பொதுமக்களே அகற்றினர்.

Tags

Next Story