திண்டிவனத்தில் 254 துப்புரவு தொழிலாளர்களுக்கு போர்வை
போர்வை வழங்கல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செஞ்சி சாலையில் உள்ள பருவத ராஜ குல மீனவர் சமுதாய பொதுசேவை அறக்கட்டளை சார்பில் துப்புரவு தொழிலாளர்களுக்கு போர்வை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ் மாநில பருவத ராஜ குல மீனவர் சங்க தலைவர் சரவணன், பருவத ராஜகுல மீனவர் பொது அறக்கட்டளை தலைவர் ராகவன் ஆகியோர் தலைமை தாங்கினர். திண்டிவனம் பருவதராஜ குல மீனவர் சமுதாய பொது சேவை அறக்கட்டளை தலைவர் செல்வம், செயலாளர் வாணியம்பாடி மகேந்திரன், துணை தலைவர் கிருஷ்ணகிரி சாந்தகுமார்,
செயலாளர் சீனிவாசன், பொருளாளர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் முழுவதும் ராஜ குல மீனவர் பொது அறக் கட்டளை நிறுவனர் சாமிக்கண்ணு, திண்டிவனம் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் ஆகியோர் திண்டிவனம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் 254 பேருக்கு இலவசமாக போர்வை மற்றும் தலா 5 கிலோ அரிசி வழங்கினர்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் விநாயகம், முத்து, சேகர், ரமேஷ், ஆலய தர்மகர்த்தாக்கள் தயாளன், ரமேஷ், ஆறுமுகம், ஜெகநாதன், பிர்லா செல்வம், சட்ட ஆலோசகர்கள் குருமூர்த்தி, லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.