கண்களை கட்டிக்கொண்டு போதைக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

கண்களை கட்டிக்கொண்டு போதைக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
X

விழிப்புணர்வு சைக்கிள் பயணம்


சேலத்தில் கைலாஷ் மானசரோவர் மேல்நிலைப் பள்ளியும் காவல் துறையினரும் இணைந்து நடத்திய போதைபொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சீயில் மாணவர்கள் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக கண்களைக் கட்டி கொண்டு சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்தனர்.
சேலம் கைலாஷ் மானசரோவர் (சி.பி.எஸ்.இ) மேல்நிலைப் பள்ளியும் காவல் துறையினரும் இணைந்து பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு, குறித்து சமூக விழிப்புணர்வு என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேலம் ஏவிஎஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி குழுமங்களின் செயலாளர் ராஜவிநாயகம், இயக்குநர் கிரண்குமார், முதல்வர் அஸ்வினி பிரியா ஆகியோர் தலைமை வகித்தனர். சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் என்.மதிவாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து உலக சாதனை சைக்கிள் பயணத்தை துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக கண்களைக் கட்டி கொண்டு சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்தனர். இந்த விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சியில் ஆறு மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story