அமரன் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி முற்றுகை

அமரன் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி முற்றுகை

முற்றுகை 

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில முற்றுயிட்டு, அமரன் திரைப்படத்திற்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story