போக்குவரத்துக்கு இடையூறாக தடுப்பு - காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்துக்கு இடையூறாக தடுப்பு - காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி

சாலை தடுப்பு 

பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், மாறாக சாலை சேதமடைந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை தடுப்பு அமைத்துள்ளனர்

காஞ்சிபுரம் சாலை தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்டு இருந்த பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறி வந்தது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் உடைப்பு ஏற்பட்டபகுதியில், பள்ளம் தோண்டப்பட்டு குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டது. இருப்பினும், குழாய் சீரமைப்புக்காக பள்ளம் தோண்டிய இடத்தில், தார் ஊற்றி சீரமைக்காமல், தற்காலிகமாக மண் கொட்டப்பட்டு அந்த இடத்தில், சாலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையின் மையப் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலை தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளதால், சாலை அகலம் குறுகிவிட்டது. இதனால், இடதுபக்கம் செல்ல வேண்டிய வாகனங்கள், வலதுபக்கம் செல்வதால், அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன.  காஞ்சிபுரம் தாமல்வார் தெரு, துாய இதய அன்னை ஆலயம் அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஆறு மாதங்களுக்கும் மேலாக 'மேன்ஹோல்' வழியாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இதனால், மண் அரிப்பு ஏற்பட்டு தார் சாலை சேதமடைந்துள்ளதால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வந்தனர். இதையடுத்து, பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், மாறாக சாலை சேதமடைந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை தடுப்பு அமைத்துள்ளனர்.

Tags

Next Story