ஆத்தூர் : பைத்தூரில் அரசு பேருந்தை மறித்து சாலை மறியல்

ஆத்தூர் அருகே பைத்தூர் பாய்கடை ஒன்னாவது வார்டு பகுதியில் ஓராண்டுக்கு மேலாக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்கவும் முறையான குடிநீர் வழங்கவும் 200க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல்.உடனடியாக சீரமைக்காவிட்டால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவிப்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் ஊராட்சிக்குட்பட்ட 1 வது வார்டு அண்ணா குட்டை பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் சாலையை சீரமைக்க ஓராண்டுக்கு முன் தோண்டி போடப்பட்ட சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் அவ்வழியாகச் செல்லும் அரசு பேருந்துகளை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி மாணவர்கள்,பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளான நிலையில். தகவல் அறிந்து வந்த ஆத்தூர் ஊரக போலீசார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். மேலும் உடனடியாக சாலையை சீரமைக்கா விட்டால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story