கிள்ளுக்குடி ஊராட்சியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

கிள்ளுக்குடி ஊராட்சியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

நாகை மாவட்டம் கிள்ளுக்குடி ஊராட்சியில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் பெண்கள் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கிள்ளுக்குடி ஊராட்சியில் சுமார் 1000 மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கிய நிலையில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

"தெற்கு தெரு, கீழத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு நாளைக்கு 10 குடம் தண்ணீர் மட்டுமே குடிநீர் கிடைத்து வந்தது. இதையடுத்து கடந்த ஒரு மாதம் முன்பு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க குடி நீர் குழாய் சீரமைத்து அனைத்து பகுதிக்கும் சீரான, போதிய குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர்..

இந்நிலையில் கிள்ளுக்குடி மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வீட்டுக்கு ஒரு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த குடிநீர் இணைப்யில் இருந்து மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சுவதால் கிள்ளுக்குடி ஊராட்சியில் பெரும்பாலான பகுதிக்கு குடி நீர் தட்டுப்பாடு எற்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் திடீரென நேற்று கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அங்கு வந்த வலிவலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில்,

தண்ணீர் வழங்க அதிகாரிகள் இடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Tags

Read MoreRead Less
Next Story