நாட்டரம்பள்ளியில் முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்
சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி பகுதியில்கடந்த இரண்டு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை.இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி தலைவரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கத்தாரி நாட்டாரம்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வாரத்தை நடத்தினர்.முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags
Next Story