பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டுக்கு உட்பட்ட யதோக்தகாரி மாட வீதி, திருவள்ளுவர் தெரு, கம்மாள தெரு, மாகாளியம்மன் தெரு, உள்ளிட்ட தெருக்களில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால், சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. மேலும், வீடுகளில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில் இருந்து கழிவுநீர் வெளியேறும் குழாயில் இருந்து, கழிவுநீர் ரிட்டர்ன் ஆவதாக அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், இப்பகுதிவாசிகள் குளியல் மற்றும் கழிப்பறையை பயன்படுத்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சியில் புகார் தெரிவித்தால், அடைப்பை சரி செய்கின்றனர். ஓரிரு நாட்களில் மீண்டும் அடைப்பு ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சியின் 23வது வார்டில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story