வடிகாலை மறித்து சாலை: விவசாயிகள் போராட்டம்

கும்பகோணம் அருகே வடிகாலை மறித்து சாலை அமைக்கப்படுவதாக கூறி அதை எதிர்த்து விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அருகே வடிகாலை மறித்து சாலை அமைக்கப்படுவதாக கூறி அதை எதிா்த்து விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே உடையாளூரில் உள்ள வடிகால் வாய்க்கால் மூலம் ஏறத்தாழ 200 ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. மேலும், இந்த வாய்க்கால் மழைநீா் வடிகாலாகவும் உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்கு லாரிகள் செல்லும் விதமாக சாலை அமைக்கப்படுகிறது. இந்தச் சாலை, வடிகாலை மறித்து அமைக்கப்படுவதால், வயல்களில் தண்ணீா் தேங்கும் நிலை நிலவுகிறது என விவசாயிகள் புகாா் எழுப்பி வருகின்றனா்.

ஆனால், இதுதொடா்பாக அரசு அலுவலா்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற புகாரும் நிலவுகிறது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், பாமகவினா் இணைந்து புதன்கிழமை பணியைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்துக்கு பாமக தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலா் ம.க. ஸ்டாலின் தலைமை வகித்தாா். வன்னியா் சங்க மாவட்டச் செயலா் விமல், மாவட்ட அமைப்புச் செயலா் ரமேஷ், மாவட்டத் துணைச் செயலா்கள் குமாா், பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தகவலறிந்த பட்டீஸ்வரம் காவல் நிலையத்தினா், வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என அலுவலா்கள் தெரிவித்ததையடுத்து, விவசாயிகள், பாமகவினா் கலைந்து சென்றனா்.

Tags

Next Story