ரத்த தான விழிப்புணா்வு பேரணி !
ரத்த தான விழிப்புணா்வு
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சாா்பில், உலக குருதி கொடையாளா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சாா்பில், உலக குருதி கொடையாளா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ரத்த தானத்தை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணியை முதன்மையா் சுகந்தி தொடங்கி வைத்தாா். துணை கண்காணிப்பாளா் சுரேஷ் பாபு, ரத்த வங்கி மருத்துவ அலுவலா் லில்லி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவு ரத்த தானம் செய்தவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Next Story