ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கம்

வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு ரத்ததான குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. உலக ரத்த தானம் தினத்தை அனுசரிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். நோக்கம், அதன் நன்மைகள் குறித்து மருத்துவர்கள் எடுத்து கூறினார். தொடர்ந்து நண்பர்கள் உறவினர்கள் சக பணியாளர்களுக்கு ரத்ததானம் குறித்து எடுத்து கூறினார்.

தொடர்ந்து நண்பர்கள் உறவினர்கள் சகப் பணியாளர்களுக்கு ரத்த தானம் குறித்து எடுத்துக் கூறுவேன்.ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது இனம்,மதம் பாகுபாடு இன்றி தானம் செய்வேன். உயிர் இழப்பு ஏற்படாமல் இருக்க தன்னார்வமகா ரத்த தானம் செய்வேன் என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அரசு மருத்துவமனைக்கு தொடர்ந்து 56வது முறையும் முகாம் நடத்தி ரத்ததானம் பெற்று தந்த வெள்ளகோயில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சேர்ந்தவர்களுக்கு நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்படுது.

அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் கௌரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன், நிர்மல், அரிமா அருண்குமார் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் நன்றி கூறினார்

Tags

Next Story