ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

தெள்ளார் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமில், 57 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.

தெள்ளார் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமில், 57 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் வட்டார ஆரம்ப சுகா தார நிலையம், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி, தெள்ளார் ராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி, ரோட்டரி சங்கம் இணைந்து ரத்ததான முகாம் நேற்று கல்லூரி வளாகத்தில் நடத்தினர். முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஹித்தேன்.திஷா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த், துணைத் தலைவர் அருண், ஒன்றிய கவுன் சிலர் சுகந்தினி கோபிநாதன், ரோட்டரி சங்க தலைவர்குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி செயலாளர் சிவராமன் வரவேற்றார்.

இதில் ரத்ததான முகாமினை புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து தொடக்கி வைத்து ரத்தம் தானம் செய்வதால் பிறர் உயிர் காப்பாற்றப்படுவதுடன் ரத்தம் தான செய்பவர்களுக்கு புதிய ரத்தம் உருவாகி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றன. மாணவர்கள் வருடத்திற்கு ஒரு முறை அவசியம் ரத்தம் தானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். முகாமில் 57 மாணவ மாணவியர்கள் ரத்தம் தானம் செய்தனர். தானமாக பெறப்பட்ட ரத்தத்தினை பாதுகாப்புடன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கிக்கு கொண்டு செல்லப் பட்டது.முடிவில்வட்டார சுகாதார ஆய்வாளர் கோதண்டராமன் நன்றி கூறினார்.

Tags

Next Story