அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) குமாரவேலு தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் அன்புமலர் தலைமையிலான குழுவினர் கலந்துக் கொண்டு மாணவ மாணவியர்களுக்கு இரத்த தானம் செய்வதற்கான தகுதிகள், அவசியம் மற்றும் வருடத்திற்கு எத்தனை முறை ரத்த தானம் செய்யலாம் என்பதைப் பற்றியும் இரத்த தானம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ரெட் கிராஸ் செயலர் ராஜேஷ் கண்ணன், துறைத் தலைவர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா அலுவலர்கள் கலந்துக் கொண்டனர். இம்முகாமில் 73 மாணவ மாணவியர் இரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வெஸ்லி செய்திருந்தார்.