தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இரத்த தான முகாம்
இரத்ததான முகாம்
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி செயலர் சிபானா, முதல்வர் ஜெஸி, துணை முதல்வர் குழந்தை தெரஸ், சுய நிதிப் பிரிவு இயக்குநர் ஜெய ராணி ஆகியோர் இரத்த தான முகாமை தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியுடன் இணைந்து லயன்ஸ் கிளப் உறுப்பினர் மருத்துவர் அச்சுதன் முகாமை நடத்தினார். கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் என 30பேர் இரத்த தானம் செய்தனர். நாட்டு நலப் பணித் திட்டம், செஞ்சிலுவை இயக்கம், ரோட்ராக்ட் கிளப், தேசிய மாணவர் படை மாணவிகள், பேராசிரியர்கள் இணைந்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.
Next Story