ராசிபுரம் கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் ரத்ததான முகாம்

ராசிபுரம் கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் ரத்ததான முகாம்

இரத்த தான முகாமில் கலந்து கொண்டவர்கள்

கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் சர்வதேச மகளிர் தினத்தை தொடர்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஓ.சௌதாபுரம் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமினை கல்லூரி தலைவர் க.சிதம்பரம் துவக்கி வைத்தார்.

ஓ.சௌதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விக்னேஸ் இதில் பங்கேற்று ரத்ததான முகாமின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த முகாமிற்கு செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஓ.சௌதாபுரத்திலிருந்து வருகை புரிந்தனர்.

மேலும் இந்த இத்ததான முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ரத்ததானம் செய்தனர் முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story