75 வது குடியரசு தின விழா :29 ம் ஆண்டாக ரத்ததான முகாம்

75 வது குடியரசு தின விழா :29 ம் ஆண்டாக ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

சங்ககிரி பகுதியில் யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.
இந்திய நாட்டின் 75வது குடியரசு தினத்தையொட்டி சேலம் மாவட்டம் சங்ககிரி வி.என்.பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் ,சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை, வடுகபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 29 ம் ஆண்டாக ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சங்ககிரி பகுதிகளில் உள்ள பல்வேறு அமைப்பின் இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார். இதனை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பெற்று ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது .

Tags

Next Story