காங்கிரஸ் கட்சி சார்பில் ரத்ததான முகாம்
ரத்தான முகாம்
அன்னை இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரம் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
அன்னை இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரம் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொலை செய்யப்பட்டார்.இந்த நினைவு நாள் முன்னிட்டு காங்கிரஸ் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர்.
மேலும் தேசிய ஒருமைப்பாடு தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ரத்த தானம் செய்தனர். இதில் 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி கிழக்கு மண்டல சேர்மன் கார்த்திக் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநகர் மாவட்டத் தலைவர் மணிகண்டன் ரத்த தானம் செய்தார்.
Next Story