கொண்டமநாயக்கன்பட்டி இளைஞர் குழு சார்பில் இரத்த தான முகாம்!
நாமக்கல்
நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் மற்றும் ரெட்கிராஸ் செயலர் சி.ஆர்.இராஜேஸ் கண்ணன் ஆகியோர் இரத்த தான முகாமமை துவக்கி வைத்தனர்.
நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை, கொண்டம நாயக்கன்பட்டி இளைஞர் குழு சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமினை நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் மற்றும் ரெட்கிராஸ் செயலர் சி.ஆர்.இராஜேஸ் கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.ரெட்கிராஸ் செயலர் தனது உரையில் குறிப்பிடும் போது மனித நேயத்துடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஏழை எளிய மக்களின் பயன்பாட்டுக்கு அரசு இரத்த வங்கிகளுக்கு இரத்த தானம் வழங்கிட அனைவரும் தன்னார்வத்துடன் வழங்கிட வேண்டும் என்று வேண்டுகோளுக்கிணங்க.. இன்று இது போன்று கிராமப்பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இரத்த தானம் வழங்கியது பாராட்டுதலுக்குரியது, மேலும் மருத்துவ துறையில் எவ்வளவு விலை கொடுத்தாலும் தானாக உருவாக்க முடியாத ஒரு விந்தை திரவம் தான் இரத்தம் என்று அவர் பேசினார். இம்முகாமினை கொண்டமநாயக்கன்பட்டி ஆர்.ராஜா தலைமையில் ஜி.பி.வி.பாலன், கமலசேகரன், சாம்பமூர்த்தி, சதீஷ், மோகன், பாலுசாமி, மணிகண்டன் மற்றும் பாஸ்கரன் உள்ளிட்ட இளைஞர் குழு அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.இம் முகாமில் 51 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டது.
Next Story