ரோட்டரி சங்கம் சார்பில் இரத்த தான முகாம்

ரோட்டரி சங்கம் சார்பில்  இரத்த தான முகாம்

இரத்த தான முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ரோட்டரி கிளப், தெள்ளார் ரோட்டரி கிளப் மற்றும் தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து மாபெரும் இரத்த தான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தினர். இதில் தெள்ளார் வட்டார மருத்துவர்கள் மற்றும் கிளப் பொறுப்பாளர்கள் குணசேகரன், கிப்சன், பாலசுந்தரம், சிவராமன் சுந்தர், தெள்ளாறு ஊராட்சி மன்றத் தலைவர் டிகேஜி ஆனந்த், கல்லூரி முதல்வர் இரா. முனைவர் ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கல்லூரி மாணவர்கள் பலரும் பங்கேற்று இரத்ததானம் செய்தனர். மேலும் அனைவருக்கும் பழங்கள் மற்றும் சத்துப் பொருட்கள் வழங்கப்பட்டது.



Tags

Next Story