பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள்
நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஏப்ரல்,மே மாதங்கள் சீசன் காலங்களாகும், இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்க நகரின் மைய பகுதியில் பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது,இந்த பிரையண்ட் பூங்காவில் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவதும் வாடிக்கையான ஒன்றாகும், இதனையடுத்து இந்த வருடம் 61வது மலர்கண்காட்சி நடைபெற உள்ளதால் பூங்கா நிர்வாகம் பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்,
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 கட்டமாக ஊட்டி,பெங்களூர், கொல்கத்தா,டெல்லி உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் இருந்து சுமார் 1 லட்சம் மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது, இதனை தொடர்ந்து தற்போது பூக்கள் பூக்க துவங்கியுள்ளன இதில் சால்வியா,பாப்பி, டெல்பினியம், ஆஸ்டர்,மேரி கோல்டு ,பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுலா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா பூ வகைகள் உள்ளிட்ட பூக்கள் மலர் படுகைகளில் பூக்கதுவங்கியதுடன், பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையிலும் அமைந்துள்ளது, மேலும் மலர் கண்காட்சியில் லட்சக்கணக்கான பூக்கள் பூத்து குழுங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரையண்ட் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதனை தொடர்ந்து வண்ண வண்ண நிறங்களிலும்,பல்வேறு வகைகளிலும் பூக்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளதை பிரையண்ட் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்,மேலும் மற்ற மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மலைப்பகுதியில் நிலவும் இதமான கால நிலையை அனுபவித்து செல்வதாகவும் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். மேலும் மலர்கண்காட்சிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பல வகையான அலங்கார செடிகள் மற்றும், மலர்களால் பல்வேறு வடிவமைப்புகள் அமைக்கப்படும் என பூங்கா நிர்வாகத்தினர் சார்பில் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.