திருவள்ளுவா் கழகத்தில் பட்டிமன்றம்
திருவள்ளுவா் கழகத்தில் பட்டிமன்றம்
திருவள்ளுவா் கழகத்தில், தமிழ் விழாவின் திருக்கு முற்றோதல் வேள்வி, பட்டிமன்றம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் திருவள்ளுவா் கழகத்தில், தமிழ் விழாவின் இரண்டாம் நாளான திருக்கு முற்றோதல் வேள்வி பட்டிமன்றம் நடைபெற்றன. தென்காசி திருவள்ளுவா் கழக அரங்கில் நடைபெற்ற திருக்கு முற்றோதல் வேள்விக்கு, பொறியாளா் இளங்கோவன் தலைமை வகித்தாா். எம்எம்எஸ்.இலக்குமணன் முன்னிலை வகித்தாா். குத்தாலிங்கம் நன்றி கூறினாா். கம்பனின் ஒப்பிலாப் படைப்புத்திறனுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்ற பொருளில் பட்டிமன்றம் நடைபெற்றது. கல்யாணி சிவகாமிநாதன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் அழகராஜா, புலவா் பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராசிரியா் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா். இராமனே என்ற தலைப்பில் பேராசிரியை வேலம்மாள் முத்தையா, சிவசங்கா், உஷா முத்துகிருஷ்ணன் ஆகியோரும், இராவணனே என்ற தலைப்பில் சேரை பாலகிருஷ்ணன், சரவணசெல்வன், புன்னைவன நாறும்பூநாதன் ஆகியோரும் பேசினா். துணைத் தலைவா் சங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Next Story