கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நடைபெற்ற படகு அலங்கார போட்டி

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நடைபெற்ற படகு அலங்கார போட்டி
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 17 ஆம் தேதி கோடை விழா துவங்கியது, 10நாட்கள் நடைபெறும் இந்த‌ கோடை விழாவில் தினந்தோறும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வருகிறது, இதனையடுத்து 7வது நாள் கோடை விழாவில் இன்று முக்கிய நிகழ்வான‌ நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி நடத்தப்பட்டது, இதில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பாக பிளாஸ்டிக்கை உபயோகிப்பதை தவிர்க்கவும், அனைவரும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும், மலை கிராமங்களில் உள்ள குடிநீர் திட்டம், பழங்குடியினர் நல வீடு,கிராம சாலை திட்டம் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்கள் வடிவமைக்க‌ப்பட்டு காட்சிபடுத்தப்பட்டது.

மேலும் சுற்றுலாத்துறை சார்பில் தமிழர்கள் விரும்பும் ஜல்லிக்கட்டு காளை , பொங்கல் வைப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டிருந்தது, மேலும் தோட்டக்கலை துறை சார்பாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாத்து , மீன்வளத்துறை சார்பில் மீனவன் வலை விரித்து மீன் பிடிப்பது, பசுமை போர்த்திய மலை தொடர்களில் அருவி கொட்டுவது போலவும், மீன்கள் உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டது,இந்த படகு அலங்கார போட்டியை கோட்டாட்சியர் சிவராம்,ஆணையாளர் சத்தியநாதன் துவக்கி வைத்தனர் ,இதனையடுத்து ந‌ட்ச‌த்திர‌ ஏரியில் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் ம‌ற்றும் பொதும‌க்க‌ள் க‌ண்டு ர‌சிக்கும் வித‌மாக‌ அலங்காரம் செய்யப்பட்ட படகுகள் சிறிது நேர‌ம் வ‌ல‌ம் வ‌ந்த‌து, இதில் ஊரக வளர்ச்சி துறை முதல் பரிசையும்,மீன்வளத்துறை இரண்டாவது பரிசையும், சுற்றுலாத்துறை மூன்றாவது பரிசையும் த‌ட்டிச்சென்ற‌ன‌ர், இந்த படகு அலங்கார போட்டியை சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்தவாறும், ஏரிக்க‌ரையில் நின்ற‌வாறும் கண்டு ரசித்து ம‌கிழ்ந்த‌ன‌ர், மேலும் ஜல்லி கட்டு காளை போன்று சுற்றுலாத்துறை சார்பில் காட்சிபடுத்தியது பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்ததும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

Tags

Next Story