படகில் இன்ஜின் திருட்டு - மீனவர் கைது

படகில் இன்ஜின் திருட்டு - மீனவர் கைது

வில்சன்

கொல்லங்கோடு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் இருந்து இன்ஜின் திருடிய மீனவரை போலீசார் கைது செய்தனர்.

கொல்லங்கோடு அருகே சூசைபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் தியோன்ஸ் மகன் றொனால்டு.இவருக்கு சொந்தமான நாட்டு படகு இரயுமன்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த படகிற்கு கடந்த 13ம் தேதி சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான இன்ஜினை றொனால்டு வாங்கி படகில் வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று மீன் பிடிக்க வேண்டி படகில் சென்று பார்த்த போது இன்ஜின் திருடப்பட்டு இருந்தது.

இது சம்பந்தமாக றொனால்டு கொடுத்த புகாரின் பேரில்நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், தூத்தூர் வட்ட விளாகம் பகுதியைச் சேர்ந்த அற்புத அடிமை மகன் வில்சன் படகு இன்ஜினை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடிய இன்ஜினை தனது நாட்டு படகில் பொருத்தி தன்னுடைய இன்ஜின் என்று கூறி உள்ளார்.போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், இன்ஜின் திருடியதை ஒப்புக்கொண்டார்.இதை அடுத்து அவரிடம் இருந்து இன்ஜினை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story