நெல்லையப்பர் கோவிலில் தெப்பத் திருவிழா

நெல்லையப்பர் கோவிலில் தெப்பத் திருவிழா

தெப்பத் திருவிழா

தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் நடந்த தெப்ப திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் தைப்பூச திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நெல்லுக்கு வேலியிடுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக தெப்ப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோயிலின் வெளி பகுதி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் வான வேடிக்கையோடு நடைபெற்ற விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story