ஆழ்கடலில் படகில் தீ விபத்து; கடலில் குதித்து தப்பிய மீனவர்கள்

ஆழ்கடலில் படகில் தீ விபத்து; கடலில் குதித்து தப்பிய மீனவர்கள்

கன்னியாகுமரியை சேர்ந்த மீனவரின் படகு ஆழ்கடலில் இருந்தபோது, தீ விபத்து உண்டான நிலையில், கடலில் குதித்து தப்பிய காட்சிகள் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரியை சேர்ந்த மீனவரின் படகு ஆழ்கடலில் இருந்தபோது, தீ விபத்து உண்டான நிலையில், கடலில் குதித்து தப்பிய காட்சிகள் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன் துறை பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் (50). அதே பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் (45). இவர்கள் இருவரும் நேற்று காலை பைபர் படகு ஒன்றில் தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென படகின் உட்பகுதியில் இருந்து தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் தீயை அணைக்க முயற்சித்தனர்.

ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் இருவருக்கும் உடனடியாக இருவரும் கடலில் குதித்தனர். கடலில் தத்துளித்துக் கொண்டிருந்த இருவரையும் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகு மூலம் மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் படகின் பெரும்பாலான பகுதி எரிந்து சேதமடைந்தது. தற்போது படகு எரியும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக குளச்சல் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story