பெரியகுளம் கண்மாயில் விரைவில் படகு போக்குவரத்து

பெரியகுளம் கண்மாயில் விரைவில் படகு போக்குவரத்து

படகு 

சிவகாசி அருகே உள்ள பெரியகுளம் கண்மாயில் விரைவில் படகு போக்குவரத்து துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பெரியகுளம் கண்மாயில் படகு சேவை தொடங்கும் வகையில் கொல்லத்திலிருந்து படகு சிவகாசி வந்துள்ளது.சிவகாசியை சுற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலையில் குற்றாலம், கொடைக்கானல் போன்ற சுற்றுலாதளங்களுக்குதான் செல்ல வேண்டியுள்ளது. இதனை போக்கும் வகையில் சிவகாசியில் மாநகராட்சி சார்பாக பல்வேறு பகுதிகளில் பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு இடங்களில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடல்போல் கட்சியளிக்கும் சிவகாசி சிறுகுளம், பெரியகுளம் கண்மாய்களில் படகு சவாரி சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சிவகாசி பெரியகுளம் கண்மாய் 72 ஏக்கா் நிலப்பரப்பு கொண்டதாகும். கடந்த மாதம் பெய்த மழையில் பெரியகுளம் கண்மாய் முழுக் கொள்ளவை எட்டியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்மாய் நடுவே உள்ள மியாவாக்கி காடுகளை பசுமை மன்றத்தினர் படகு மூலம் சென்று பார்வையிட்டனர்.

இதனை சமூக வலைதளங்களில் பார்த்த இளைஞர்கள் கண்மாயில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் படகு சேவை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சிறுகுளம், பெரியகுளம் கண்மாயில் படகு சேவை தொடங்க ஏற்பாடு நடைபெற்று வந்த நிலையில் கேரளா மாநிலம் கொல்லத்திலிருந்து புதிய படகு சிவகாசி வந்துள்ளது.இந்த படகு பெரியகுளம் கண்மாய் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படகு முன்பு நின்று ஏராளமான இளைஞர்கள் செல்பி எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்து மகிழ்ந்து வருகின்றனர். படகு சவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும் பட்சத்தில் படகு சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

Tags

Next Story