குமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தொடக்கம்

குமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு  படகு போக்குவரத்து தொடக்கம்

விவேகானந்தர் மண்டபம்

குமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் திடீரென கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. இதைத்தொடர்ந்து அன்று மதியம் முதல் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தா நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

மேலும் கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் போலீசார் தடைவித்தனர். நேற்று இரண்டாவது நாளாகவும் கடல் சீற்றம் நீடித்ததால் படகு போக்குவரத்து தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.

இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெரும்பாலான மீனவர்களும் கடந்த இரண்டு நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் இன்று கடல் சீற்றம் தணிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

இதைத்தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று காலை 8 மணி முதல் வழக்கம்போல் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தொடங்கியது. மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

Tags

Next Story