உடல் தானம் பதிவு முகாம்
பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் -ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை மற்றும் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்திய உடல் தானம் பதிவு முகாமை தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் MP ஆ.இராசா துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள சமத்துவபுரம் அருகே, பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் -ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை மற்றும் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்திய உடல் தானம் பதிவு முகாம்டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்றது, இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா. மாவட்ட ஆட்சியர் கற்பகம், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார். அப்போது 4 - பேர் உடல் உறுப்பு தானம் பதிவு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், ஜெகதீசன், நல்லதம்பி, பெரம்பலூர் ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், லெட்சுமி மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் லெட்சுமி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சித்தளி. ராமச்சந்திரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், பொறியாளர் சிவராஜ், ஜெயராமன், மகேஸ்குமரன், அருண் ஆபிரஹாம், உதிரம் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.