திருமயம் அருகே குடிநீர் தொட்டியிலிருந்து குழந்தை உடல் மீட்பு

திருமயம் அருகே குடிநீர் தொட்டியிலிருந்து குழந்தை உடல் மீட்பு

காவல் நிலையம் 

திருமயம் அருகே குடிநீர் தொட்டியிலிருந்து குழந்தை உடல் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமயம் அருகே கரையப்பட்டியை சேர்ந்தவர் மோகன் (34). விவசாயி. இவரது மனைவி கிருத்திகா. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த டிசம்பரில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் தாய், தந்தை அருகே உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. இதையடுத்து கணவனும், மனைவியும் தேடியபோது மாடியில் இருந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் குழந்தை கிடந்துள்ளது.

குழந்தை மயங்கி கிடந்ததாக எண்ணி அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார்

இது குறித்து மோகன் அளித்த புகாரின்பேரில் கே.புதுப்பட்டி இன்ஸ்பெக் டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோத னைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story