குவைத்தில் இறந்த தொழிலாளியின் உடல் செஞ்சியில் நல்லடக்கம்
சமீபத்தில் குவைத் தீ விபத்தில் இருந்த தொழிலாளியின் உடலுக்கு செஞ்சியில் மரியாதை செலுத்தி, நல்லடக்கம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கிருஷ்ணாபுரம் தியாகி இப்ராஹிம் தெருவைச் சோ்ந்தவா் முஹம்மது ஷரீப் (35). குவைத்தில் பணியாற்றி வந்தாா். அங்கு அவா் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிகழ்ந்த தீ விபத்தில் 46 இந்தியா்கள் உள்பட மொத்தம் 50 போ் உயிரிழந்தனா். இதில் முஹம்மது ஷரீப்பும் உயிரிழந்தாா்.அவரது உடல் விமானம் மூலம் கேரள மாநிலம், கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னா், அங்கிருந்து அவசர ஊா்தி மூலம் செஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு அவரது உடல் செஞ்சிக்கு வந்தடைந்தது.அங்கு அவரது உடலுக்கு அரசு சாா்பில் செஞ்சி வட்டாட்சியா் ஏழுமலை உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பின்னா் அந்தப் பகுதியில் உள்ள இடுகாட்டில் முஹம்மது ஷரீப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.