பெரம்பலூர் அருகே காணாமல் போன ஆடு மேய்க்கும் தொழிலாளி சடலமாக மீட்பு

பெரம்பலூர் அருகே காணாமல் போன ஆடு மேய்க்கும் தொழிலாளி சடலமாக மீட்பு
சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி
பெரம்பலூர் அருகே காணாமல் போன ஆடு மேய்க்கும் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார்.

பெரம்பலூர் அருகே குரும்பலூரை சேர்ந்தவர் ராஜா வயது -53. இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். இவர் ஜூன் 31ஆம் தேதி வழக்கம் போல் தனது 25 ஆடுகளையும், பக்கத்து வீட்டை சேர்ந்த சாந்தி என்பவரின் 16 ஆடுகளையும் மேய்ச்சலுக்காக குரும்பலூர் மலை பகுதிக்கு ராஜா ஓட்டி சென்றார். இரவு நீண்ட நேர மாகியும் ராஜாவும்,

மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்ற ஆடுகளும் ம், வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் ராஜாவையும், ஆடுக ளையும் அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் தேடினர். எங்கும் தேடியும் ராஜாவும், ஆடுகளும் கிடைக்காததால் இது தொடர்பாக அவர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் ராஜாவையும், ஆடுகளையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஜூலை 1ஆம் தேதி குரும்பலூரை சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரது பருத்தி காட்டில் ராஜா இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் ஆடுகள் மூலக்காடு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன.

இதையடுத்து ராஜாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story