புலியூர் மயானம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் கண்டெடுப்பு
காவல் நிலையம்
கரூர் மாவட்டம், புலியூர் மயானம் அருகே அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக அப்பகுதி மக்கள் அறிந்து, அது குறித்து புலியூர் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வினோத்குமார் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதை உறுதி செய்த அவர், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த அடையாளம் தெரியாத முதியவர் உடலை, அடையாளம் காண்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து,
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இங்கு வந்து இறக்க என்ன காரணம்? என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.