திண்டுக்கல்லில் மக்காச்சோள கதிருடன் விவசாயிகள் மனு

திண்டுக்கல்லில் மக்காச்சோள கதிருடன்  விவசாயிகள் மனு

மனு கொடுக்க வந்த விவசாயிகள்

மக்காச்சோளம் மற்றும் நெற்பயிர்களுடன் விவசாயிகள் தன்னுடைய ஏக்கர் இழப்பீடு கேட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுவுடன் வந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமாட்சிபுரம், கோட்டைப்பட்டி, கட்டச் சின்னம்பட்டி,கரிசல்பட்டி, சில்வார்பட்டி, தாதன்கோட்டை, கே.புதுக்கோட்டை உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 700 ஏக்கர் மக்காச்சோளம் விவசாயம் செய்ய பயிரிடப்படுகிறது.

தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மக்காச்சோளம் கதிர்களை உரித்துப் பார்த்தபோது சோளங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர் .

இதனால் வேதனை அடைந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்துடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்காச்சோள தட்டை மற்றும் நெல்மணிகளுடன் மனு கொடுக்க வந்தனர்.மேலும் இழப்பீடு ஏற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூபாய்40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

Tags

Next Story