நாடாளுமன்ற தேர்தலையொட்டி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் ரயில் நிலையத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் ரயில் நிலையத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்தவும், வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே மாநகரில் மக்கள் கூடும் இடங்களில் அசம்பாவிதம் ஏதேனும் நடைபெறாமல் தடுத்திட 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 4 போலீசார் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் 4 குழுக்களாக பிரிந்து சென்று நேற்று இரவு கோரிமேடு, அடிவாரம், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம், கொண்டலாம்பட்டி பஸ் நிறுத்தம், பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு சோதனைகளை மேற்கொண்டனர்.
Next Story