மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு சோதனை!

மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு சோதனை!

வெடிகுண்டு சோதனை

மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு தடுப்பு சோதனையை புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸார் மேற்கொண்டனர்.

மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு தடுப்பு சோதனையை புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸார் மேற்கொண்டனர். மக்களவைத் தேர்தலையொட்டி பாதுகாப்புப் பணிகளுக்காக ஏற்கெனவே மத்திய ஆயுதக் காவல் படை போலீஸார் புதுக்கோட்டை வந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோல வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸார் புதுக்கோட்டை வந்துள்ளனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அவர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பயணிகளின் பைகளில் மெட்டல் டிடெட்டர் கருவிகளைக் கொண்டு சோதனை செய்தனர். வெடிகுண்டு தடுப்பு காவல் உதவி ஆய்வாளர் அருணகிரி தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது. தேர்தல் முடியும் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story