தென்காசி மாவட்டத்தில் வெடிகுண்டு சோதனை தீவிரம் !
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், மக்கள் கூடும் முக்கிய இடங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் காவல்துறை வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு சோதனை செய்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story