வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
மதுரை விமான நிலையம்
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கொல்கத்தா விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது மதியம் 1 மணியளவில் வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மெயில் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலையடுத்து விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தின் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர் கணேசன் மத்திய தொழில பாதுகாப்பு படை துணை கமாண்டண்ட் விஸ்வநாதன் மற்றும் அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் விமான நிலைய அதிகாரிகள் விமான நிறுவன அதிகாரிகள் பங்கேற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதனை தொடர்ந்து விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்வது விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளை தீவிரமாக கண்காணிப்பு என்ற முடிவெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையப் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு பணிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.