தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் !

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் !

பள்ளி

மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும் பள்ளி வளாகத்திலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மாங்காடு அடுத்த கெருக்கம்பாக்கத்தில் மத்திய அரசு பாட திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு தங்களது பெற்றோர் பிள்ளைகளை கொண்டு வந்து விட்டு சென்றனர் வகுப்புகள் தொடங்கிய சிறிது நேரத்தில் பள்ளியில் உள்ள அலுவலகத்திற்கு ஈ மெயில் வந்துள்ளது. அதில் வழக்கம் போல் பள்ளிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அந்த வெடிகுண்டு சிறிது நேரத்தில் வெடித்து விடும் என ஈமெயில் வந்துள்ளது இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து மோப்ப நாய் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்கள் அனைவரும் பள்ளியின் பின் பகுதியில் உள்ள மைதானத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த தகவலையடுத்து வீட்டிற்கு சென்ற பெற்றோர் பலர் அலறி அடித்துக் கொண்டு தங்களது பிள்ளைகளை பதற்றத்துடன் அழைத்துச் சென்றனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த புத்தக பை ஏதும் பள்ளி நிர்வாகம் கொடுத்து அனுப்பவில்லை புத்தக பைகள் அனைத்தும் பள்ளி வகுப்பறையிலேயே உள்ளது வெடிகுண்டு நிபுணர்கள் மாணவர்களின் புத்தக பைகள், வாகனங்கள் என பல்வேறு இடங்களில் தீவிர சோதனை செய்து வருகின்றனர் கடந்த வெள்ளிக்கிழமை இதே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து அது வெடிகுண்டு புரளி என தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் அதே பள்ளிக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும் பள்ளி வளாகத்திலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த பள்ளியில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு வரும் நிலையில் தற்போது தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அந்த மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதி வருவதும் நேற்றைய தினமே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வந்ததாகவும் நேற்றைய தினம் பள்ளி விடுமுறை என்பதால் இன்று பள்ளி வகுப்பறைகள் தொடங்கிய பின்பு ஊழியர்கள் வெடிகுண்டு மிரட்டல் வந்த ஈ மெயிலை தாமதமாக பார்த்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story