சேத்துப்பட்டு ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்தில் 160 உறுப்பினர்களுக்கு போனஸ்

சேத்துப்பட்டு ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்தில் 160 உறுப்பினர்களுக்கு போனஸ்

போனஸ் வழங்கும் நிகழ்வு


திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில்160 ஆசிரியர்களுக்குரூபாய் ரூ.13 லட்சத்து 81 ஆயிரத்து 263 போனஸ் ஆக வழங்கப்பட்டது. சேத்துப்பட்டு ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தின் பொதுப் பேரவை கூட்டம் வட்டார வள மையத்தில் சங்கத்தின் தலைவர் ஆசிரியர் பி.சஙகர், தலைமையில் நடைபெற்றது.செயலாளர் குகன் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டின் தனிக்கை அறிக்கையின்படி 160 அங்கத்தினர்களுக்கு ரூ1381623/- லாப பங்கீடு வழங்கப்பட்டது. மேலும் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சங்கத்தின் அங்கத்தினர்களாக சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பழனி, மணி,சரவணன்,சிவா, தர்மராஜ்.நிர்மலா, .சாந்தி , செல்வி,சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story