உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தகம் நன்கொடை வழங்கும் விழா 

உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தகம் நன்கொடை வழங்கும் விழா 

புத்தக நன்கொடை வழங்கும் விழா 

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் அர்ஜுன் சிங் நூலகம், கல்வியியல் துறை, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பெரியார் சமுதாய வானொலி இணைந்து உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தை கொண்டாடும் விதமாக பெரியார் கல்வி நிறுவனங்களால் நன்கொடையாக பெற்ற புத்தகங்களை வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தக நன்கொடை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை தஞ்சையை அடுத்த வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. புத்தக நன்கொடை வழங்கும் விழாவிற்கு, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட நூலக அலுவலர் பா.முத்து, புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் உரையாற்றினார். தொடர்ந்து, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன், புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை, “வாசிக்கலாம் என்கிறது புத்தகம் “வாசி”க்கலாம் என்கிறது தொழில்நுட்பம்” என்கிற தலைப்பில் உரையாற்றினார். தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், பள்ளி மாணவர்களுக்கு பள்ளி பாடப் புத்தகத்தை மட்டும் படிப்பதோடு மட்டுமல்லாமல் பிற நூல்களைப் படிக்க வேண்டும். அதன் மூலம் வாழ்வில் எப்படி வெற்றி பெறலாம் என எடுத்துக் கூறினார். 500 நன்கொடை புத்தகங்களை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் வெ.இராமச்சந்திரன், தஞ்சை மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் ஆகியோர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில், முன்னதாக பல்கலைக்கழக அர்ஜுன்சிங் நூலகத்தின் இயக்குனர் த.நர்மதா வரவேற்றார். நிறைவாக, வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் வை.சிவசங்கரி நன்றி கூறினார்.

Tags

Next Story