காஞ்சிபுரத்தில் புத்தக கண்காட்சி துவக்கம்
காஞ்சிபுரத்தில் புத்தக கண்காட்சி துவக்கம்
வருகின்ற 26ம் தேதி வரை நடக்கவிருக்கின்ற புத்தகண்காட்சியில் 10 சதவீத தள்ளுபடில் புத்தகங்கள் பெற்றுகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மேல்நிலைப் பள்ளியில், 23வது ஆண்டு புத்தக கண்காட்சி துவக்க விழா நடந்தது. எஸ்.எஸ்.கே.வி, கல்வி குழும தலைவர் சி.கே.ராமன் தலைமை வகித்தார். தொழிலதிபர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம், சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர், கண்காட்சியை திறந்து வைத்து, நுால்களை பார்வையிட்டார். எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக்குலேசன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் விஜயலட்சுமி வரவேற்றார். வரும் 26ம் தேதி வரை நடக்கும் புத்தக கண்காட்சியில், 7 பதிப்பகங்களைச் சேர்ந்த, பல்வேறு தலைப்புகளில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக இடம்பெற்றுள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் கழிவு வழங்கப்படும் என்றனர்
Next Story