தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மத்தூர் பேருந்து நிலையத்தில் மூன்றாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்தூர் பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தாண்டை முன்னிட்டு புத்தாண்டை புத்தகங்களுடன் கொண்டாடுவோம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் இந்த வருடமும் கடந்த திங்கட்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை வரை மத்தூர் பேருந்து நிலையத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.இதில் வட்டார செயலாளர் பிரவீண்குமார் வரவேற்புரை ஆற்றினார். வட்டாரதலைவர் இராஜா தலைமை வகித்தார். மத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மீன சக்தி, அஇஅதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பியரோஜான், மத்தூர் திமுக ஒன்றிய கழகச் செயலாளர் வடக்கு குண.வசந்தரசு, களர்பதி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி, திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் அரிமா தனசேகரன், வழக்கறிஞர் புகழேந்தி, ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி பெருமாள் மற்றும் மத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் பர்வீன்தாஜ் சலீம் விழாவில் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி சிறப்புரை ஆற்றி தொடங்கி வைத்தனர்.

இதில் ஆர்வத்துடன் பொதுமக்கள் இளைஞர்கள் மாணவ மாணவியர்கள் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு அவர்கள் தேவைக்கேற்ற புத்தகங்களை வாங்கி சென்றனர் இதில் மத்தூர் வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் அரிமா சக்தி டி என் எஸ் பி முன்னாள் மாவட்ட தலைவர் சர்ஜான் டிஎன்பிசி மாவட்ட துணை தலைவர் சௌந்தர்யா பாண்டியன் முன்னாள் மாவட்ட தலைவர் வீரமணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெகநாதன் மாவட்ட செயலாளர் சந்தோஷ் மாவட்ட துணை தலைவர் நாகூர் ஹுசேன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரவி ஆகிய அனைவரும் அறிவியல் சார்ந்த கருத்துக்களை வழங்கி சிறப்பித்தனர். புத்தகங்களை வாங்கிச் சென்றவர்களின் பெயர்களை புத்தகத்தில் பதிவிட்டு இறுதியில் குலுக்கல் முறையில் 50 நபர்களை தேர்வு செய்து ரூபாய் 500 மதிப்புள்ள புத்தகங்களை வழங்கினர். இறுதியில் வட்டாரப் பொருளாளர் நாகராஜ் நன்றி உரையாற்றி. நாட்டுப்பண் உடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Tags

Next Story